22 ஸ்டார்லிங்க் செயற்கைகோள்களை விண்ணில் செலுத்திய ஸ்பேஸ் எக்ஸ்

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், புதிய ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் தொகுதிகளை விண்ணில் செலுத்தி உள்ளது. கடந்த ஏப்ரல் 1ம் தேதி, ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் 22 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன. கலிபோர்னியாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்டன. மோசமான வானிலை காரணமாக இரு முறை ஒத்திவைக்கப்பட்ட திட்டம், நேற்று வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. 2024 ஆம் ஆண்டில், ஃபால்கன் ராக்கெட் 32 ஆம் முறையாக விண்வெளி பயணத்தை மேற்கொண்டுள்ளது. மேலும், ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைப்புக்கான […]

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், புதிய ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் தொகுதிகளை விண்ணில் செலுத்தி உள்ளது.

கடந்த ஏப்ரல் 1ம் தேதி, ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் 22 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன. கலிபோர்னியாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்டன. மோசமான வானிலை காரணமாக இரு முறை ஒத்திவைக்கப்பட்ட திட்டம், நேற்று வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. 2024 ஆம் ஆண்டில், ஃபால்கன் ராக்கெட் 32 ஆம் முறையாக விண்வெளி பயணத்தை மேற்கொண்டுள்ளது. மேலும், ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைப்புக்கான செயற்கைக்கோள்கள் 21 வது முறையாக எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. தற்போதைய நிலவரப்படி, ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைப்பில் மொத்தம் 6100 செயற்கைக்கோள்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அவற்றில் 5633 செயல்பாட்டில் உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu