ஸ்டார்ஷிப் ராக்கெட் ஜூன் 6 ல் ஏவுவதற்கு தயார்

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஸ்டார்ஷிப் என்ற பிரம்மாண்ட ராக்கெட்டை வடிவமைத்துள்ளது. இந்த ராக்கெட்டுக்கான பரிசோதனைகள் 3 முறை நடத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு முறையும் முந்தைய பரிசோதனையை விட கூடுதல் வெற்றி பதிவாகி வருவதாக ஸ்பேஸ் எக்ஸ் தெரிவித்துள்ளது. அந்த வகையில், வரும் ஜூன் 6-ம் தேதி, ஸ்டார்ஷிப் பரிசோதனை செய்யப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது. இது ஸ்டார்ஷிப் ராக்கெட்டின் நான்காவது பரிசோதனை ஆகும். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டெக்சாஸ் மாகாண ராக்கெட் ஏவுதளத்தில் ஸ்டார்ஷிப் ராக்கெட் ஏவுவதற்கு தயார் நிலையில் […]

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஸ்டார்ஷிப் என்ற பிரம்மாண்ட ராக்கெட்டை வடிவமைத்துள்ளது. இந்த ராக்கெட்டுக்கான பரிசோதனைகள் 3 முறை நடத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு முறையும் முந்தைய பரிசோதனையை விட கூடுதல் வெற்றி பதிவாகி வருவதாக ஸ்பேஸ் எக்ஸ் தெரிவித்துள்ளது. அந்த வகையில், வரும் ஜூன் 6-ம் தேதி, ஸ்டார்ஷிப் பரிசோதனை செய்யப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது. இது ஸ்டார்ஷிப் ராக்கெட்டின் நான்காவது பரிசோதனை ஆகும்.

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டெக்சாஸ் மாகாண ராக்கெட் ஏவுதளத்தில் ஸ்டார்ஷிப் ராக்கெட் ஏவுவதற்கு தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது. சுமார் 400 அடி உயரம் கொண்ட ராக்கெட்டின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. உள்ளூர் நேரப்படி ஜூன் 6ஆம் தேதி காலை 8:00 மணி அளவுக்கு ராக்கெட் ஏவப்பட உள்ளது. இதனை நேரலையில் ஒளிபரப்பு செய்ய ஸ்பேஸ் எக்ஸ் திட்டமிட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu