ஸ்பேஸ் எக்ஸ் தலைமையிலான போலரிஸ் டான் முதல் தனியார் விண்வெளி நடைப்பயணத்தை மேற்கொள்கிறது. இந்த திட்டத்தில் விண்வெளி செல்லும் வீரர்கள்:
ஜாரெட் ஐசக்மேன்: Shift 4 Payments இன் CEO ஆன இவர், இன்ஸ்பிரேஷன் 4 பணியை வெற்றிகரமாக நடத்தியவர். போலரிஸ் டான் பணிக்கு நிதியுதவி செய்து வருகிறார்.
சாரா கில்லிஸ்: ஸ்பேஸ் எக்ஸில் மூத்த விண்வெளி செயல்பாட்டு பொறியாளரான இவர், விண்வெளி வீரர் பயிற்சியாளராக இருந்து விண்வெளி வீரராக மாறி, குழு பயிற்சி மற்றும் தயாரிப்பில் தனது விரிவான அனுபவத்தை அளித்துள்ளார்.
அன்னா மேனன்: மருத்துவ அதிகாரியான மேனன், குழுவினரின் உடல்நலம் மற்றும் செயல்பாடுகளை மேற்பார்வையிடுகிறார். பயோமெடிக்கல் இன்ஜினியரிங் பின்னணி மற்றும் நாசாவில் ஃப்ளைட் கன்ட்ரோலராக அனுபவம் கொண்டவர்.
Scott Poteet: முன்னாள் அமெரிக்க விமானப்படை விமானியான இவர், இன்ஸ்பிரேஷன் 4க்கான திட்ட இயக்குநராக பணியாற்றினார்.