ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் போலரிஸ் டான் என்ற விண்வெளி திட்டம், முதல் தனியார் விண்வெளி நடைப்பயணத்தை நிகழ்த்தப் போகும் வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டமாகும். ஆனால், இந்தத் திட்டம் ஆகஸ்ட் மாத இறுதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் சிக்கலான தன்மை மற்றும் சமீபத்தில் நடந்த ஃபால்கன் 9 ராக்கெட் விபத்து ஆகியவை இந்த தாமதத்திற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. இந்த தாமதம் காரணமாக, நாசாவின் க்ரூ-9 திட்டத்திற்கு ஆகஸ்ட் 18 ஆம் தேதி முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
போலரிஸ் டான் திட்டம், 4 தனியார் குடிமக்களை நிலவை தாண்டிய விண்வெளி பயணத்திற்கு அழைத்துச் செல்லும். பூமியைச் சுற்றி 5 நாள் பயணமாக இருக்கும். இந்த பயணத்தில், 2 குழு உறுப்பினர்கள் வரலாற்று சிறப்புமிக்க விண்வெளி நடை பயணத்தில் ஈடுபட உள்ளனர். இதுவரை, போலரிஸ் டான் திட்டத்தின் புதிய தொடக்க தேதி குறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.