ரம்ஜான் மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு தமிழகத்தில் சிறப்பு பேருந்துகள்

April 10, 2024

ரம்ஜான் மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு தமிழகத்தில் 1265 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. ரம்ஜான் பண்டிகை 11 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அதனை தொடர்ந்து 13,14 ஆம் தேதிகளில் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னை மற்றும் இதர இடங்களுக்கு கூடுதலாக பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி சென்னை கிளம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு 10ம் தேதி 315 பேருந்துகளும், 12ம் தேதி 290 பேருந்துகளும், 13ம் […]

ரம்ஜான் மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு தமிழகத்தில் 1265 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ரம்ஜான் பண்டிகை 11 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அதனை தொடர்ந்து 13,14 ஆம் தேதிகளில் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னை மற்றும் இதர இடங்களுக்கு கூடுதலாக பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி சென்னை கிளம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு 10ம் தேதி 315 பேருந்துகளும், 12ம் தேதி 290 பேருந்துகளும், 13ம் தேதி 340 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. அதேபோன்று சென்னை கோயம்பேட்டில் இருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர் உள்ளிட்ட இடங்களுக்கு 10, 12 மற்றும் 13ஆம் தேதிகளில் தலா 40 பேருந்துகள் வீதம் 120 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதேபோல் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோவை உள்ளிட்ட இடங்களில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu