தமிழகத்தில் வார இறுதி நாள் மற்றும் முகூர்த்த நாளை முன்னிட்டு 400 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
தமிழகத்தில் சென்னை மற்றும் பிற இடங்களில் இருந்து வார இறுதி நாள் மற்றும் முகூர்த்த நாளை முன்னிட்டு செப்டம்பர் ஒன்றாம் தேதியில் கூடுதல் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சிறப்பு நாட்களில் கூடுதல் பயணிகள் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நாட்களில் பயணிகளின் கூட்டத்தை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கி வருகிறது.
இதுவரை 1487 பயணிகள் சென்னை மற்றும் பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்ய முன்பதிவு செய்துள்ளனர். பயணம் செய்வதற்கு ஏதுவாக இன்று தினசரி இயங்கக்கூடிய பேருந்துகளும், கூடுதலாக சென்னை, கோவை, மதுரை, நெல்லை, திருச்சி, சேலம் போன்ற முக்கியமான இடங்களுக்கு 200 பேருந்துகளும், பெங்களூரில் இருந்து பிற இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் என மொத்தம் 400 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.