மகா சிவராத்திரி மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள்

மகா சிவராத்திரி மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு வரும் 8, 9, 10 ஆகிய தேதிகளில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மகா சிவராத்திரி மற்றும் முகூர்த்தம் ஆகியவை வருகின்ற 8,9, 10 அன்று வார விடுமுறை தினங்கள் என்பதால் கூடுதலாக பயணிகள் தமிழக முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தினசரி பேருந்துகளுடன் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி சென்னை கிளாம்பாக்கம் […]

மகா சிவராத்திரி மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு வரும் 8, 9, 10 ஆகிய தேதிகளில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

மகா சிவராத்திரி மற்றும் முகூர்த்தம் ஆகியவை வருகின்ற 8,9, 10 அன்று வார விடுமுறை தினங்கள் என்பதால் கூடுதலாக பயணிகள் தமிழக முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தினசரி பேருந்துகளுடன் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை,திருச்சி, கும்பகோணம், மதுரை, நெல்லை, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு மொத்தம் 430 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் சென்னை கோயம்பேட்டில் இருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூர் ஆகிய இடங்களுக்கு 70 பேருந்துகளும், பெங்களூர், திருப்பூர், ஈரோடு, மற்றும் கோவை ஆகிய இடங்களில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 200 பேருந்துகளும் என மொத்தம் 1360 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மேலும் சொந்த ஊர்களில் இருந்து திரும்புவதற்கு வசதியாக அனைத்து இடங்களிலும் சிறப்பு பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளன. கூட்ட நெரிசலை தவிர்க்க பயணிகள் www.tnstc.in என்ற இணையதளத்தில் பயணசீட்டுகளை முன்பதிவு செய்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu