தாம்பரம் - நெல்லை இடையே பயணிகளின் அதிக கூட்டத்தை தவிர்ப்பதற்காக நாளை மற்றும் நாளை மறுநாள் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
தாம்பரம் - நெல்லை இடையே வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. தாம்பரத்தில் இருந்து (வண்டி எண் 06051) நாளை மாலை 5 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 4.15 மணிக்கு நெல்லையை சென்றடைகிறது. அதேபோல நெல்லையில் இருந்து (வண்டி எண் 06052) மாலை 4.50 மணிக்கு புறப்பட்டு 13ஆம் தேதி காலை 4:10 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும் என தெற்கு ரயில்வே செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.