தீபாவளியை முன்னிட்டு, ஸ்பைஸ் ஜெட் விமானிகளுக்கு சம்பள உயர்வு அறிவிப்பு

October 19, 2022

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஸ்பைஸ் ஜெட் விமானிகளுக்கு சம்பள உயர்வு குறித்த அறிவிப்பு முன்னதாகவே வெளிவந்துள்ளது. இதுகுறித்து பேசிய ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர், “ஸ்பைஸ் ஜெட் நிறுவனம், மாதாந்திர அடிப்படையில் விமானிகளுக்கான சம்பளத்தை உயர்த்தி வருகிறது. அந்த வகையில், அக்டோபர் மாதத்தில் விமானிகளுக்கான சம்பளம் 22 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், 80 மணி நேர விமான போக்குவரத்துக்கு பின்னர் விமானிகளுக்கு வழங்கப்படும் சம்பளம் 7 லட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளது” என்று கூறினார். இந்த சம்பள […]

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஸ்பைஸ் ஜெட் விமானிகளுக்கு சம்பள உயர்வு குறித்த அறிவிப்பு முன்னதாகவே வெளிவந்துள்ளது. இதுகுறித்து பேசிய ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர், “ஸ்பைஸ் ஜெட் நிறுவனம், மாதாந்திர அடிப்படையில் விமானிகளுக்கான சம்பளத்தை உயர்த்தி வருகிறது. அந்த வகையில், அக்டோபர் மாதத்தில் விமானிகளுக்கான சம்பளம் 22 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், 80 மணி நேர விமான போக்குவரத்துக்கு பின்னர் விமானிகளுக்கு வழங்கப்படும் சம்பளம் 7 லட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளது” என்று கூறினார்.

இந்த சம்பள உயர்வினால், விமானி ஒருவரின் மாத சம்பளத்தில் 55% உயர்வு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன், கொரோனா பரவலுக்கு முன்னர் விமானிக்கு வழங்கப்பட்ட சம்பளத்தை விட இது கூடுதலாக அமையும் என்பதும் கவனிக்கத்தக்கது. இந்த சம்பள உயர்வு நவம்பர் 1ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானிகள் மட்டுமல்லாது பயிற்சியாளர்கள் மற்றும் முதல் நிலை அதிகாரிகளுக்கான சம்பளங்களும் முறைப்படி உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதத்தில், விமானிகளுக்கு சம்பளம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதாக ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அதன்பின்னர், கடந்த மாதத்தில், 80 விமானிகளை, 3 மாத காலத்திற்கு சம்பளம் இல்லா விடுப்பில் செல்வதற்கு ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் அறிவுறுத்தியது. நிறுவனத்தின் நிதி நிலையை கட்டுக்குள் கொண்டு வர இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நடவடிக்கையின் மூலம், நிறுவனத்தின் நிதிநிலைமை சற்று முன்னேறி உள்ளதாகவே தெரிகிறது. எனவே, செப்டம்பர் மாதத்தில் பயிற்சியாளர்களின் சம்பளத்தில் 10 சதவீதமும், விமானிகள் மற்றும் முதல் நிலை அதிகாரிகளின் சம்பளத்தில் 8 சதவீதமும் உயர்த்தப்பட்டது. தற்போது, அக்டோபர் மாதத்தில், விமானிகள் மற்றும் முதல் நிலை அதிகாரிகளின் சம்பளம் 22% உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், இதுவரையில், ஸ்பைஸ் ஜெட் நிறுவனம், கொரோனாவை காரணம் காட்டி, தனது பணியாளர்களை பணி நீக்கம் செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu