ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் குத்தகைக்கு எடுத்த மூன்று இன்ஜின்களை 15 நாட்களுக்குள் திருப்பித் தர வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு இந்த உத்தரவு பெரும் சவாலாக அமைந்துள்ளது.
இந்த இன்ஜின்களை குத்தகைக்கு கொடுத்த டீம் ஃபிரான்ஸ் 01 எஸ்ஏஎஸ் மற்றும் சன்பேர்ட் பிரான்ஸ் 02 எஸ்ஏஎஸ் நிறுவனங்கள், ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் குத்தகை கட்டணத்தை செலுத்தாததால் இவ்வாறு நீதிமன்றத்தை நாடி இருந்தது குறிப்பிடத்தக்கது. ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தற்போது ரூ.3,000 கோடி நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது. ஆனால் இந்த உச்ச நீதிமன்ற உத்தரவு நிறுவனத்தின் இந்த திட்டத்தை பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.