ஐரோப்பிய ஒன்றியத்தின் தரவுகள் கொள்கைகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டு, ஸ்பாட்டிஃபை நிறுவனத்திற்கு 5 மில்லியன் டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஸ்ட்ரீமிங் துறையில் ஸ்பாட்டிஃபை நிறுவனம் முன்னணியில் உள்ளது. இந்த நிறுவனத்தின் தளம் மற்றும் செயலி, வாடிக்கையாளர் தரவுகளை எவ்வாறு கையாள்கிறது என்பதை, IMY எனப்படும் ஸ்வீடன் நாட்டு தகவல் பாதுகாப்பு அமைப்பு ஆய்வு செய்தது. அந்த ஆய்வில், தளத்தில் குறைபாடுகள் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. “தனிநபர் தரவுகளை எந்த வகையில் ஸ்பாட்டிஃபை தளம் பயன்படுத்துகிறது என்பது குறித்த போதிய தெளிவான தகவல்கள் இல்லை. எனவே, தனிநபர் தரவுகள் சட்டபூர்வமாக கையாளப்படுகிறதா என்பதில் கேள்வி எழுந்துள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.