வடகொரியா நாடு 2வது முறையாக உளவு செயற்கைக்கோள் ஏவும் முயற்சியில் ஈடுபட்டு இருந்தது. தற்போது, இந்த முயற்சி தோல்வி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம், வட கொரியா தனது முதல் உளவு செயற்கைக்கோள் ஏவும் முயற்சியில் ஈடுபட்டது. அந்த முயற்சி தோல்வி அடையவே, 2வது முறையாக செயற்கைக்கோள் செலுத்தும் திட்டத்தில் பணியாற்றி வந்தது. இந்த நிலையில், "சொல்லிமா 1 என்ற புதிய வகை ராக்கெட் மூலம் மல்லிக்யாங் 1
செயற்கைக்கோள் செலுத்தப்பட்டது. ஆனால், ராக்கெட்டின் 3 வது நிலையில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், செயற்கைக்கோள் ஏவும் திட்டம் தோல்வியில் முடிந்துள்ளது" என வடகொரியா விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனாலும், தொடர்ந்து 3 வது முறையாக உளவு செயற்கைக்கோள் ஏவும் முயற்சியில் ஈடுபட உள்ளதாக வடகொரியா அறிவித்துள்ளது. வரும் அக்டோபர் மாதத்தில், செயற்கைக்கோள் ஏவும் முயற்சி மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளது.