இலங்கையில் வரும் செப்டம்பர் 21ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.
இலங்கையில் கடந்த 2022-ல் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. அதனையடுத்து அதிபராக இருந்த ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேறினார். அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றார். அவருடைய பதவி காலம் வரும் நவம்பர் மாதத்துடன் முடிவடைய உள்ளது. அதையடுத்து அந்நாட்டு தேர்தல் ஆணையம் அதிபர் தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி வரும் செப்டம்பர் 21ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. ஆகஸ்ட் 15 முதல் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. ரணில் விக்ரமசிங்கே மீண்டும் அதிபராக போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். அதேபோல் முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகாவும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.