இன்று இரவு இலங்கை நாடாளுமன்றத்தை கலைக்கப் அதிபர் அனுர குமார திசநாயகே உத்தரவை பிறப்பிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் கட்சி தலைவரான அனுர குமார திசநாயகே வெற்றி பெற்றார். அவர் நேற்று அதிபராக பதவி ஏற்றுக் கொண்டார். இதற்கிடையே, பிரதமராக இருந்த தினேஷ் குணவர்தனே தனது பதவியை ராஜினாமா செய்தார். புதிய அதிபர் தலைமையில் புதிய அரசு அமைவதற்கு இது வசதியாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.
இதனையடுத்து, தினேஷ் குணவர்தனே தலைமையிலான அமைச்சரவை பதவி விலகியுள்ளது. தற்போதைய நிலையில், அதிபர் அனுர குமார திசநாயகே தலைமையில் 4 இடைக்கால அமைச்சர்கள் பதவியேற்க உள்ளனர். மேலும், இன்று இரவு இலங்கை நாடாளுமன்றத்தை கலைக்கப் அதிபர் அனுர குமார திசநாயகே உத்தரவை பிறப்பிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை நாடாளுமன்றத்திற்கு வரும் நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் பொதுத் தேர்தல் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.