வெளிநாட்டு ஆய்வு கப்பல்களை இலங்கையில் நிறுத்த அனுமதி

July 8, 2024

இலங்கை துறைமுகங்களில் வெளிநாட்டு ஆய்வு கப்பல்கள் நிறுத்த அனுமதிக்கப்படும் என்று இலங்கை அரசு கூறியுள்ளது. வர்த்தகம் காரணமாக கிழக்கு ஆசியாவுக்கும் மேற்கு ஆசியாவுக்கும் இடையே பயணம் செய்யும் கப்பல்கள் எரிபொருள் நிரப்புதல் போன்ற பணிகளுக்காக இலங்கை துறைமுகங்களில் நின்று செல்கின்றன. இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலங்கை அம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனா உளவு கப்பலை நிறுத்திய போது அதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்தியாவை உளவு பார்ப்பதற்காக அனுப்பப்பட்ட கப்பல் என்று […]

இலங்கை துறைமுகங்களில் வெளிநாட்டு ஆய்வு கப்பல்கள் நிறுத்த அனுமதிக்கப்படும் என்று இலங்கை அரசு கூறியுள்ளது.

வர்த்தகம் காரணமாக கிழக்கு ஆசியாவுக்கும் மேற்கு ஆசியாவுக்கும் இடையே பயணம் செய்யும் கப்பல்கள் எரிபொருள் நிரப்புதல் போன்ற பணிகளுக்காக இலங்கை துறைமுகங்களில் நின்று செல்கின்றன. இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலங்கை அம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனா உளவு கப்பலை நிறுத்திய போது அதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்தியாவை உளவு பார்ப்பதற்காக அனுப்பப்பட்ட கப்பல் என்று குற்றம் சுமத்தியது. அதேபோல் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஓர் உளவு கப்பல் நிறுத்தப்பட்டது. இதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இந்நிலையில் வெளிநாட்டு ஆய்வு கப்பல்களை இலங்கை துறைமுகங்களில் நிறுத்த ஓராண்டுக்கு தடை விதிப்பதாக கடந்த ஜனவரி மாதம் இலங்கை அரசு அறிவித்தது. தற்போது இந்த தடை அமலில் உள்ளது. இந்நிலையில், இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி சாப்ரி ஜப்பான் பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் அங்கு செய்தியாளர்களிடையே பேசுகையில், இலங்கை துறைமுகங்களில் வெளிநாட்டு ஆய்வு கப்பல்கள் நிறுத்துவதற்கான தடை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முடிவடைகிறது. அதன் பின்பு அந்த தடை விலக்கிக் கொள்ளப்படும். அதன் பிறகு துறைமுகங்களில் வெளிநாட்டு ஆய்வு கப்பல்கள் நிறுத்த அனுமதிக்கப்படும். இந்த விவகாரத்தில் ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு விதமான விதிமுறையை இலங்கை அரசு பின்பற்ற முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu