இலங்கையில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
இன்று இலங்கையில் 9-வது அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதில் 38 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசின் மத்தியில் கடுமையான போட்டி நிலவுகிறது. ரணில், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக இருந்தாலும், தனியாகவே களமிறங்கி உள்ளார்.
இந்த நிலையில், இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மக்கள் வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களிக்கின்றனர். வாக்குப்பதிவு மாலை 4 மணி வரை நடைபெறும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு முடிந்தவுடன், இன்று இரவு வாக்கு எண்ணிக்கை தொடங்கப்படும். நாளை மதியத்திற்குள் இலங்கையின் புதிய அதிபர் யார் என்பது அறிவிக்கப்படும். இந்த தேர்தல் இலங்கையின் அரசியல் வரலாற்றில் முக்கியமான தருணமாக அமைகிறது.