இலங்கை வீரர் நிரோஷன் டிக்வெல்லா ஊக்கமருந்து பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு, அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அணியின் தொடக்க வீரர் நிரோஷன் டிக்வெல்லா, 2014-ல் அறிமுகமாகி 55 ஒருநாள், 54 டெஸ்ட் மற்றும் 28 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். லங்கா பிரீமியர் லீக் தொடரின் போது ஊக்கமருந்து பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு, அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், கொக்கெய்ன் உட்கொண்டதாகவும் சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், தீவிர விசாரணைகள் நடந்து வருகின்றன. 2021-ல் கோவிட்-19 நெறிமுறையை மீறியதால் 1 ஆண்டு தடை விதிக்கப்பட்டவர், தற்போது தனது கிரிக்கெட் கேரியரின் முடிவை அணுகியுள்ளார்.