இங்கிலாந்தின் சவுத் போர்டு நகரில் உள்ள நடன பள்ளி ஒன்றில் கத்தி குத்து தாக்குதலில் 2 சிறுவர்கள் பலியாகினர்.
இந்த பள்ளியில் ஏராளமான சிறுவர்கள் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த பள்ளியில் இருந்த 17 வயது சிறுவன் ஒருவன் திடீரென மற்ற சிறுவர்களை கத்தியால் குத்தி தாக்கினான். இந்த தாக்குதலில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை தடுக்க முயற்சி செய்த ஒன்பது பேர் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டது. மாணவர்கள் ரத்த காயத்துடன் அந்தப் பள்ளியை விட்டு வெளியே ஓடினர். இதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். சம்பவத்தை குறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சிறுவனை கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து பிரதமர் ஸ்டர்மர் அதிர்ச்சி தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.