எலான் மஸ்க் நிறுவனமான ஸ்டார்லிங்க், பிரேசிலில் சமூக ஊடக தளமான எக்ஸ் அணுகலை தடுப்பதாகச் சொல்லி, உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க ஒப்புக்கொண்டுள்ளது. ஆரம்பத்தில் இந்த உத்தரவை எதிர்த்த ஸ்டார்லிங்க், தனது வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த முடிவை எடுக்கத் தூண்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தவறான தகவல்களை பரப்புவதை தடுக்கவும், சமூக ஒற்றுமையை பாதுகாக்கவும், பிரேசிலில் எக்ஸ் தள முடக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிரேசிலில் 225,000 பிராட்பேண்ட் ஒப்பந்தங்களைக் கொண்ட ஸ்டார்லிங்க், அங்குள்ள சந்தையில் 0.5% பங்கைக் கொண்டுள்ளது. இந்த நிலையில், ஸ்டார்லிங்கின் வங்கிக் கணக்குகள், வாகனங்கள் மற்றும் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட சொத்துக்கள், பிரேசிலிய அரசாங்கத்தால் முடக்கப்பட்டுள்ளதால், ஸ்டார்லிங்க் நீதிமன்ற உத்தரவுக்கு இணங்கியுள்ளது.