தமிழ்நாட்டைப் போல இலங்கையிலும் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இலங்கையில் ஆரோக்கியமான சுறுசுறுப்பான தலைமுறை என்ற திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை உணவு அளிக்கப்படும். மேலும் காலை உணவு ஊட்டச்சத்து நிபுணர்களின் பரிந்துரைகள் அடிப்படையில் தயாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் நாடு முழுவதும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் 16 லட்சம் மாணவர்கள் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தினை அதிபர் ரணில் விக்ரமசிங்கே தொடங்கி வைத்துள்ளார். இத்திட்டத்திற்காக உலக உணவுத் திட்டம் மற்றும் அமெரிக்க வேளாண் துறையுடன் இணைந்து 660 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.