ஈரான் மற்றும் இஸ்ரேல் செல்ல வேண்டாம் என வெளியுறவுத்துறை அறிவுறுத்தல்

April 13, 2024

இந்திய வெளியுறவுத்துறை இந்தியர்களை ஈரான் மற்றும் இஸ்ரே லுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தி வருகிறது. இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக காசா மீது தாக்குதல் நடத்த தொடங்கியது. இந்த தாக்குதல் தற்போது வரை நீட்டித்து கொண்டுள்ளது. இந்நிலையில் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஈரான் தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததை அடுத்து மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இதனால் அடுத்த அறிவிப்பு வரும் வரை […]

இந்திய வெளியுறவுத்துறை இந்தியர்களை ஈரான் மற்றும் இஸ்ரே லுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தி வருகிறது.

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக காசா மீது தாக்குதல் நடத்த தொடங்கியது. இந்த தாக்குதல் தற்போது வரை நீட்டித்து கொண்டுள்ளது. இந்நிலையில் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஈரான் தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததை அடுத்து மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இதனால் அடுத்த அறிவிப்பு வரும் வரை ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இந்தியர்கள் யாரும் செல்ல வேண்டாம் என இந்திய வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது. மேலும் அங்குள்ள இந்தியர்கள் உடனடியாக இந்திய தூதரகங்களை தொடர்பு கொள்ளும் படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu