மாநில கைப்பந்து போட்டி

மாநில அளவிலான கைப்பந்து போட்டி ஏ பிரிவு ஆட்டத்தில் ஐ.ஓ.பி அணி இரண்டாவது வெற்றியை பெற்றது. சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நெல்லை நண்பர்கள் கைப்பந்து கிளப், டாக்டர் சிவந்தி கிளப் சார்பில் பி. ஜான் மற்றும் ஏ.கே சித்திரபாண்டியன் நினைவு மாநில அளவிலான கைப்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இதன் ஏ பிரிவு ஆட்டத்தில் ஐ.ஓ.பி 25-22, 25 -19 என்ற கணக்கில் எஸ். டி. ஏ.டி இரண்டாவது வெற்றியை பெற்றது. இப்பிரிவில் மற்றொரு […]

மாநில அளவிலான கைப்பந்து போட்டி ஏ பிரிவு ஆட்டத்தில் ஐ.ஓ.பி அணி இரண்டாவது வெற்றியை பெற்றது.

சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நெல்லை நண்பர்கள் கைப்பந்து கிளப், டாக்டர் சிவந்தி கிளப் சார்பில் பி. ஜான் மற்றும் ஏ.கே சித்திரபாண்டியன் நினைவு மாநில அளவிலான கைப்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இதன் ஏ பிரிவு ஆட்டத்தில் ஐ.ஓ.பி 25-22, 25 -19 என்ற கணக்கில் எஸ். டி. ஏ.டி இரண்டாவது வெற்றியை பெற்றது. இப்பிரிவில் மற்றொரு ஆட்டத்தில் வருமான வரி 2-0 என்ற கணக்கில் தமிழ்நாடு போலீசை வீழ்த்தி இரண்டாவது வெற்றி பெற்றது.

பி பிரிவு ஆட்டத்தில் எஸ்.ஆர்.எம் 26 -24, 25- 16 என்ற கணக்கில் இந்தியன் வங்கியை தோற்கடித்தது. மற்றொரு போட்டியில் டி.ஜி வைஷ்ணவா 2-1 என்ற கணக்கில் ஜிஎஸ்டி அணியை வீழ்த்தி இரண்டாவது வெற்றியை பெற்றது.

இதன் பெண்கள் பிரிவில் ஐ.சி. எப் 2-0 என்ற கணக்கில், எஸ்.ஆர்.எம் அணியையும் தமிழ்நாடு போலீஸ் 2-0 என்ற கணக்கில் டாக்டர் சிவந்தி கிளப்பையும் தோற்கடித்தது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu