சரிந்து மீண்ட இந்திய பங்குச்சந்தை

May 13, 2024

இந்த வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று சரிவுடன் தொடங்கிய இந்திய பங்குச்சந்தை இறுதியில் ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 111.66 புள்ளிகள் உயர்ந்து, 72776.13 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 48.85 புள்ளிகள் உயர்ந்து 22104.05 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. தனிப்பட்ட பங்குகளை பொறுத்தவரை, சிப்லா, ஏசியன் பெயிண்ட்ஸ், அதானி போர்ட்ஸ், டேவிஸ் லேப்ஸ், அதானி எண்டர்பிரைசஸ், எச்டிஎஃப்சி லைஃப், […]

இந்த வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று சரிவுடன் தொடங்கிய இந்திய பங்குச்சந்தை இறுதியில் ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 111.66 புள்ளிகள் உயர்ந்து, 72776.13 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 48.85 புள்ளிகள் உயர்ந்து 22104.05 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.

தனிப்பட்ட பங்குகளை பொறுத்தவரை, சிப்லா, ஏசியன் பெயிண்ட்ஸ், அதானி போர்ட்ஸ், டேவிஸ் லேப்ஸ், அதானி எண்டர்பிரைசஸ், எச்டிஎஃப்சி லைஃப், டி சி எஸ், ஹெச் டி எஃப் சி வங்கி, டாடா ஸ்டீல், பவர் கிரிட், எல் அண்ட் டி, ஐ சி ஐ சி ஐ வங்கி ஆகிய நிறுவனங்கள் ஏற்றம் பெற்றுள்ளன. அதே வேளையில், டாடா மோட்டார்ஸ், பிபிசிஎல், ஸ்ரீராம் பைனான்ஸ், என்டிபிசி, ஓஎன்ஜிசி, கோல் இந்தியா, ஏர்டெல், பாரத ஸ்டேட் வங்கி, ரிலையன்ஸ் ஆகிய நிறுவனங்கள் சரிவடைந்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu