இந்திய பங்குச் சந்தை இன்று வரலாற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. இன்று ஒரே நாளில் 2.7% அளவுக்கு பங்குச் சந்தை புள்ளிகள் வீழ்ச்சி அடைந்துள்ளன. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 2222.55 புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 662.11 புள்ளிகளும் வீழ்ச்சி அடைந்துள்ளது. சென்செக்ஸ் 78759.4 புள்ளிகளிலும், நிஃப்டி 24055.6 புள்ளிகளிலும் நிலைபெற்றுள்ளது.
இன்றைய வர்த்தகத்தில், ஐடிசி, டிசிஎஸ், ரிலையன்ஸ், இன்ஃபோசிஸ், அதானி பவர், டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், ஜொமாட்டோ, பாரதி ஸ்டேட் வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, என்டிபிசி, எஸ் வங்கி, வோடபோன், சுஸ்லான் எனர்ஜி உள்ளிட்ட அநேக நிறுவனங்கள் வீழ்ச்சி அடைந்துள்ளன. சர்வதேச அளவிலான மற்ற பங்குச் சந்தைகளிலும் கடும் சரிவு பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.