பட்ஜெட் எதிரொலி - சரிவில் பங்குச் சந்தை

July 24, 2024

நேற்று வெளியிடப்பட்ட பட்ஜெட் அறிவிப்புகளால் இந்திய பங்குச் சந்தையில் தொடர்ந்து சரிவு காணப்படுகிறது. இன்றைய வர்த்தக நாளின் இடையில் கிட்டத்தட்ட 600 புள்ளிகள் வரை சென்செக்ஸ் வீழ்ச்சி அடைந்தது. அதன் பிறகு, இன்று வெளியான பல நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் காரணமாக, வர்த்தக நேரத்தின் இறுதி கட்டத்தில் பங்குச்சந்தை உயர்ந்தது. இன்றைய வர்த்தக நேர முடிவில், சென்செக்ஸ் 280.16 புள்ளிகள் சரிந்து 80148.88 புள்ளிகளிலும், நிஃப்டி 65.55 புள்ளிகள் சரிந்து 24413.5 புள்ளிகளிலும் நிறைவடைந்துள்ளது. தனிப்பட்ட பங்குகளை […]

நேற்று வெளியிடப்பட்ட பட்ஜெட் அறிவிப்புகளால் இந்திய பங்குச் சந்தையில் தொடர்ந்து சரிவு காணப்படுகிறது. இன்றைய வர்த்தக நாளின் இடையில் கிட்டத்தட்ட 600 புள்ளிகள் வரை சென்செக்ஸ் வீழ்ச்சி அடைந்தது. அதன் பிறகு, இன்று வெளியான பல நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் காரணமாக, வர்த்தக நேரத்தின் இறுதி கட்டத்தில் பங்குச்சந்தை உயர்ந்தது. இன்றைய வர்த்தக நேர முடிவில், சென்செக்ஸ் 280.16 புள்ளிகள் சரிந்து 80148.88 புள்ளிகளிலும், நிஃப்டி 65.55 புள்ளிகள் சரிந்து 24413.5 புள்ளிகளிலும் நிறைவடைந்துள்ளது.

தனிப்பட்ட பங்குகளை பொறுத்தவரை, டாடா மோட்டார்ஸ், ரிலையன்ஸ், ஐடிசி, டாடா ஸ்டீல், டிசிஎஸ், ஐடிபிஐ வங்கி, வோடபோன், சுஸ்லான் எனர்ஜி, எம் எம் டி சி ஆகியவை ஏற்றம் பெற்றுள்ளன. அதே வேளையில், இன்ஃபோசிஸ், அதானி பவர், பந்தன் வங்கி, சுந்தரம் பைனான்ஸ், டாபர், எஸ் வங்கி, இன்டஸ் டவர்ஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐ சி ஐ சி ஐ வங்கி போன்றவை சரிந்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu