பங்குச்சந்தையில் 38000 கோடியை தாண்டிய அந்நிய முதலீடு

March 26, 2024

இந்திய பங்குச் சந்தையில் அந்நிய நிறுவனங்களின் முதலீடு அதிகரித்து வருகிறது. நிகழும் மார்ச் மாதத்தில் இதுவரை 38000 கோடி ரூபாய் அளவில் அந்நிய முதலீடு பதிவாகியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்தில் இந்திய பங்குச் சந்தையில் பதிவான அந்நிய முதலீட்டின் மதிப்பு 1539 கோடி ரூபாய் ஆகும். இது நிகழும் மார்ச் மாதத்தில் பன்மடங்கு உயர்ந்து 38000 கோடியை தாண்டி உள்ளது. மேலும், நடப்பு நிதியாண்டில் அந்நிய நிறுவனங்களின் நிகர பங்கு முதலீட்டு மதிப்பு 13893 கோடி ஆகவும், […]

இந்திய பங்குச் சந்தையில் அந்நிய நிறுவனங்களின் முதலீடு அதிகரித்து வருகிறது. நிகழும் மார்ச் மாதத்தில் இதுவரை 38000 கோடி ரூபாய் அளவில் அந்நிய முதலீடு பதிவாகியுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதத்தில் இந்திய பங்குச் சந்தையில் பதிவான அந்நிய முதலீட்டின் மதிப்பு 1539 கோடி ரூபாய் ஆகும். இது நிகழும் மார்ச் மாதத்தில் பன்மடங்கு உயர்ந்து 38000 கோடியை தாண்டி உள்ளது. மேலும், நடப்பு நிதியாண்டில் அந்நிய நிறுவனங்களின் நிகர பங்கு முதலீட்டு மதிப்பு 13893 கோடி ஆகவும், கடன் சந்தையில் பதிவாகியுள்ள நிகர முதலீடு 55480 கோடியாகவும் உள்ளது. உலகளாவிய முறையில் பொருளாதார சூழலில் ஏற்பட்டுள்ள சாதகமான மாற்றங்கள், இந்தியாவின் வலுவான பொருளாதார நிலை ஆகியவற்றின் காரணமாக அந்நிய முதலீடுகள் அதிகரித்துள்ளதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu