ஆதாருடன் மின் இணைப்பு எண்ணை இணைக்க பணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை - மின்சாரவாரியம்

November 29, 2022

ஆதாருடன் மின் இணைப்பு எண்ணை இணைக்க பணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மின்சாரவாரியம் தெரிவித்துள்ளது. மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க தமிழகம் முழுவதும் நேற்று 28-11-22 முதல் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. இந்த சிறப்பு முகாம் டிசம்பர் 31-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில், மின் இணைப்பு என்னுடன் ஆதார் எண்ணை இணைக்க நுகர்வோரிடம் பணம் வாங்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மின்சாரவாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அனைத்து மண்டல பொறியாளர்களுக்கு மின்சார வாரியம் […]

ஆதாருடன் மின் இணைப்பு எண்ணை இணைக்க பணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மின்சாரவாரியம் தெரிவித்துள்ளது.

மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க தமிழகம் முழுவதும் நேற்று 28-11-22 முதல் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. இந்த சிறப்பு முகாம் டிசம்பர் 31-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில், மின் இணைப்பு என்னுடன் ஆதார் எண்ணை இணைக்க நுகர்வோரிடம் பணம் வாங்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மின்சாரவாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அனைத்து மண்டல பொறியாளர்களுக்கு மின்சார வாரியம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் சிறப்பு முகாம்களுக்கு வரும் முதியவர்கள், மாற்று திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இணைப்பு பணி நடைபெறும் போது கணினியில் தொழிநுட்ப கோளாறு ஏற்பட்டால் மாற்று ஏற்பாடாக கணினிகள் தயாராக வைத்திருக்க வேண்டும். மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதன் முக்கியத்துவத்தை பிளக்ஸ் போர்டு மூலம் தெரியப்படுத்த வேண்டும் என்று மின்சாரவாரியம் தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu