புதுச்சேரி அரசு மருத்துவமனை ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்கள் போராட்டம்

September 27, 2024

புதுச்சேரி அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் 92 துப்புரவு ஊழியர்கள், ஒப்பந்த நிறுவனம் மாறியதால் தங்களை பணி நீக்கம் செய்ய முயற்சிப்பதாகக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 7 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் இவர்கள், புதிய ஒப்பந்த நிறுவனம் தங்களை பணிக்கு எடுக்க மறுப்பதாகக் கூறி, காலைப் பணிகளை புறக்கணித்து மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவர் சிவா சம்பவ இடத்திற்கு வந்து ஊழியர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். பின்னர் சுகாதார துறை […]

புதுச்சேரி அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் 92 துப்புரவு ஊழியர்கள், ஒப்பந்த நிறுவனம் மாறியதால் தங்களை பணி நீக்கம் செய்ய முயற்சிப்பதாகக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 7 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் இவர்கள், புதிய ஒப்பந்த நிறுவனம் தங்களை பணிக்கு எடுக்க மறுப்பதாகக் கூறி, காலைப் பணிகளை புறக்கணித்து மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவர் சிவா சம்பவ இடத்திற்கு வந்து ஊழியர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். பின்னர் சுகாதார துறை இயக்குநரை சந்தித்து, ஊழியர்களை நீக்கிவிட்டு புதிதாக நியமிப்பது நியாயமில்லை என கண்டித்தார். இது குறித்து முதல்வர் ரங்கசாமி உடன் பேசி முடிவு எடுப்பதாக உறுதியளித்தார். போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களும், முதல்வரின் முடிவு வரை போராட்டத்தை தொடருவதாக தெரிவித்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu