பப்புவா நியூ கினியாவில் 6.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

March 26, 2024

பப்புவா நியூ கினியாவில் 6.9 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவானது. இந்த சம்பவத்தில் மூன்று பேர் பலியாகி உள்ளனர். இது குறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளதாவது, பப்புவா நியூ கினியாவின் கிழக்கு செபிக் பகுதியில் தலைநகர் போர்ட் மோர்ஸ்பிக்கு வடமேற்கு பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 40 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் […]

பப்புவா நியூ கினியாவில் 6.9 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவானது. இந்த சம்பவத்தில் மூன்று பேர் பலியாகி உள்ளனர். இது குறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளதாவது, பப்புவா நியூ கினியாவின் கிழக்கு செபிக் பகுதியில் தலைநகர் போர்ட் மோர்ஸ்பிக்கு வடமேற்கு பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 40 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. ரிக்டர் அளவில் 6.9 அலகுகளாக பதிவானது என்று கூறியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் சுமார் 1000 வீடுகள் சேதம் அடைந்துள்ளது. இடிபாடுகளில் சிக்கி மூன்று பேர் பலியாகி உள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். புவி தகடுகள் உராயும் நெருப்பு வளையம் என்று அழைக்கப்படும் பகுதியில் பப்பு கினியா உள்ளது. எனவே அங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu