பூமியை தாக்கிய சூரிய புயல் - கடந்த 6 வருடங்களில் பதிவாகும் சக்தி வாய்ந்த சூரிய புயல் என அறிவிப்பு

கடந்த மார்ச் 26 ஆம் தேதி சக்தி வாய்ந்த சூரிய புயல் பூமியை தாக்கியது. கடந்த 2017 ஆம் ஆண்டுக்கு பிறகு பதிவாகும் சக்தி வாய்ந்த சூரிய புயல் இது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த சூரிய புயலால் பூமியின் காந்தப்புலம் மிகவும் பாதிப்படைந்து உள்ளதாக தெரிவித்துள்ளனர். NOAA ஸ்பேஸ் வெதர் கண்டிஷன் சென்டர் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் சூரிய புயல் குறித்து பதிவிடப்பட்டுள்ளது. அதில், புயலின் தாக்கம் தொடர்ந்து நீடிப்பதாகவும் ஆனால் பாதிப்புகள் குறைந்து […]

கடந்த மார்ச் 26 ஆம் தேதி சக்தி வாய்ந்த சூரிய புயல் பூமியை தாக்கியது. கடந்த 2017 ஆம் ஆண்டுக்கு பிறகு பதிவாகும் சக்தி வாய்ந்த சூரிய புயல் இது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த சூரிய புயலால் பூமியின் காந்தப்புலம் மிகவும் பாதிப்படைந்து உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

NOAA ஸ்பேஸ் வெதர் கண்டிஷன் சென்டர் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் சூரிய புயல் குறித்து பதிவிடப்பட்டுள்ளது. அதில், புயலின் தாக்கம் தொடர்ந்து நீடிப்பதாகவும் ஆனால் பாதிப்புகள் குறைந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜி3 ரக சூரிய புயலாக இது பூமியை தாக்கி உள்ளது. ஏற்கனவே, இந்த சூரிய புயல் பாதிப்பு குறித்து விஞ்ஞானிகள் எச்சரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. பொதுவாக, சூரிய புயல் தாக்கத்தால் தொலை தொடர்பு சேவைகள் பாதிக்கப்படுகின்றன. மற்றும் துருவப் பகுதிகளில் துருவ ஒளிகள் தென்படுகின்றன. இந்த சூரிய புயலின் போதும், இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu