சூடானில் ராணுவம் நடத்திய டிரோன் தாக்குதலில் பொது மக்கள் 40 பேர் பலியாகினர்.
ஆப்பிரிக்க நாடான சூடானில் தற்போது ராணுவ ஆட்சி நடக்கிறது. அதனை ஆர்.எஸ்.எப். எனப்படும்
துணை ராணுவத்தினர் எதிர்த்து போராடி வருகிறார்கள். இதனால் அவ்வப்போது இருதரப்புக்கும் மோதல் நடைபெறும். இந்த கலவரத்தில் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
இந்நிலையில், சூடான் தலைநகர் கார்டோமில் ராணுவத்தினர் டிரோன்களை வீசி தாக்குதல் நடத்தினர். அப்போது ட்ரான்கள் தவறுதலாக அருகே உள்ள சந்தையில் விழுந்தது. இதனால் அங்கிருந்த பொதுமக்கள் 40 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் 70-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.