சூடான் நாட்டில் ராணுவம் மற்றும் துணை ராணுவம் இடையே, அதிகாரத்தை கைப்பற்றும் உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக, வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்து வரும் பரிதாப நிலை தொடர்ந்து வருகிறது. அந்த வகையில், சூடான் தலைநகர் கார்டூமில், சனிக்கிழமை நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் 5 குழந்தைகள் உட்பட 17 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதல் யாரால் நடத்தப்பட்டது என்பது குறித்த தகவல் கிடைக்கவில்லை.
சூடானில் அதிகரித்து வரும் வன்முறை சம்பவங்கள் காரணமாக, லட்சக்கணக்கான மக்கள் புலம் பெயர்ந்து உள்ளனர். மேலும், நூற்றுக்கணக்கான குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஐநா சபையின் யூனிசெப் அமைப்பு இந்த தகவலை தெரிவித்துள்ளது. கிட்டத்தட்ட 330 குழந்தைகள் பலியாகி உள்ளதாக இந்த அமைப்பு கூறுகிறது. மேலும், தற்போதைய நிலையில் சூடானில் உள்ள 1.3 கோடி குழந்தைகளுக்கு உடனடி நிவாரணங்கள் தேவைப்படுவதாக தெரிவித்துள்ளது.