சூடான் - இருதரப்பு பேச்சு வார்த்தைக்கு ஒப்புதல் கிடைத்துள்ளதாக ஐநா தகவல்

May 2, 2023

சூடான் நாட்டில், கடந்த 3 வாரங்களாக உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. ராணுவம் மற்றும் துணை ராணுவம் இடையே ஏற்பட்டுள்ள இந்த மோதலில், பல அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இரு தரப்பினரையும் அமைதி பேச்சு வார்த்தைக்கு அழைத்து, ஐநா பேச்சு வார்த்தை நடத்த திட்டமிட்டிருந்தது. தற்போது, பேச்சு வார்த்தைக்கு இரு தரப்பும் ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. ராணுவம் மற்றும் துணை ராணுவ பிரிவினரின் தலைவர்களான அப்தல் ஃபட்டா புர்கான், முகமது ஹம்தான் டகேலோ ஆகிய […]

சூடான் நாட்டில், கடந்த 3 வாரங்களாக உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. ராணுவம் மற்றும் துணை ராணுவம் இடையே ஏற்பட்டுள்ள இந்த மோதலில், பல அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இரு தரப்பினரையும் அமைதி பேச்சு வார்த்தைக்கு அழைத்து, ஐநா பேச்சு வார்த்தை நடத்த திட்டமிட்டிருந்தது. தற்போது, பேச்சு வார்த்தைக்கு இரு தரப்பும் ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

ராணுவம் மற்றும் துணை ராணுவ பிரிவினரின் தலைவர்களான அப்தல் ஃபட்டா புர்கான், முகமது ஹம்தான் டகேலோ ஆகிய இரு தளபதிகளும் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக் கொண்டுள்ளதாக, சூடானில் உள்ள ஐநாவின் பிரதிநிதி போல்கர் பெர்த்திஸ் தெரிவித்துள்ளார். சவுதி அரேபியா அல்லது தெற்கு சூடான் பகுதியில் பேச்சுவார்த்தை நடக்கும் என கூறப்படுகிறது. எனினும், இது வெற்றிகரமாக நிறைவேறுவதில் பல்வேறு சவால்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu