சூடானில் போர் நீடித்தால் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் இறந்துவிடக்கூடும் என்று ஐநா சபையின் மனிதாபிமான பிரிவு எச்சரித்துள்ளது.
ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவம் மற்றும் துணை ராணுவ படையினர் இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு நடைபெறுகிறது. இந்த போரில் 1000-கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். தொடர்ந்து அங்கு கலவரம் நடைபெறுவதால் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மூன்றில் ஒரு பங்கு பேர் பட்டினியால் சிக்கி பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலை தொடர்ந்தால் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் இறந்துவிடக்கூடும் என்று ஐநா சபையின் மனிதாபிமான பிரிவு எச்சரித்துள்ளது. எனவே சூடானுக்கு மனிதாபிமான உதவிகளை உடனடியாக பிற உலக நாடுகள் வழங்க வேண்டும் என்று அது வலியுறுத்தியுள்ளது.