தமிழகத்தில் ஏப்ரல் 12ஆம் தேதியுடன் அனைத்து பள்ளிகளுக்கும் தேர்வு முடிவதால் 13ஆம் தேதி முதல் கோடை கால விடுமுறை அளிக்கப்பட உள்ளது.
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு அனைத்து பள்ளிகளுக்கும் முன்கூட்டியே இறுதி ஆண்டு தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி ஏப்ரல் 12 ஆம் தேதி உடன் அனைத்து பள்ளிகளின் தேர்வு முடிவு அடைவதால் 13ம் தேதி முதல் கூடுதல் பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்து திட்டமிட்டுள்ளது. பொதுவாக போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் தினமும் 800 பேருந்துகள் இயக்கப்பட்டு வரும். மேலும் வெள்ளி,சனி, ஞாயிறு மூன்று நாட்களில் 1000 பேருந்துகள் வீதம் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது கோடை விடுமுறை காரணமாக கூடுதல் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.