ஆதித்யா எல்-1 விண்கலத்தின் கவுண்ட் டவுன் தொடங்கியது

September 1, 2023

இன்று காலை 11.50 மணி அளவில் ஆதித்யா எல்-1 விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கான கவுண்ட் டவுன் தொடங்கியது. சூரியனை ஆய்வு செய்வதற்காக பி எஸ் எல் வி c - 57 ராக்கெட் மூலம் ஆதித்யா எல் 1 விண்கலம் விண்ணுக்கு செலுத்தப்பட உள்ளது. சூரியனின் புறவெலி பகுதியை ஆய்வு செய்ய இந்தியா அனுப்பும் முதல் விண்கலம் இதுவாகும். இந்த விண்கலம் சுமார் 1475 கிலோ எடை உடையது. இந்த விண்கலம் பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் […]

இன்று காலை 11.50 மணி அளவில் ஆதித்யா எல்-1 விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கான கவுண்ட் டவுன் தொடங்கியது.

சூரியனை ஆய்வு செய்வதற்காக பி எஸ் எல் வி c - 57 ராக்கெட் மூலம் ஆதித்யா எல் 1 விண்கலம் விண்ணுக்கு செலுத்தப்பட உள்ளது. சூரியனின் புறவெலி பகுதியை ஆய்வு செய்ய இந்தியா அனுப்பும் முதல் விண்கலம் இதுவாகும். இந்த விண்கலம் சுமார் 1475 கிலோ எடை உடையது. இந்த விண்கலம் பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் லாக்ரான்ஜியன் பாயிண்ட் ஒன் எனும் பகுதியில் நிலை நிறுத்தப்பட உள்ளது. அந்தப் பகுதியில் சூரியனுக்கும் பூமிக்கும் இடையேயான ஈர்ப்பு விசை சமநிலையாக இருக்கும். எனவே தான் இந்த விண்கலம் அந்த இடத்தில் இருந்தபடி சூரியனின் புறவழிப் பகுதியை ஆய்வு செய்யும்.

இந்த விண்கலத்தில் எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோமீட்டர், பிளாஸ்மா அனலைசர், சோலார் அல்ட்ரா வயலட் இமேஜிங் டெலஸ்கோப் உள்ளிட்ட 7 கருவிகள் இடம் பெற்றுள்ளன. சூரியனின் வெப்பச் சூழல், கதிர்வீச்சு, காந்தப்புலம் போன்ற அம்சங்கள் குறித்து இந்த விண்கலம் ஆய்வு மேற்கொள்ளும். சூரியனைக் குறித்து ஆய்வு செய்யும் நான்காவது நாடாக இந்தியா உள்ளது. இந்த விண்கலம் பி எஸ் எல் வி சி 57 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து செப்டம்பர் இரண்டாம் தேதி காலை 11.50 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu