சுனிதா வில்லியம்ஸ்க்கு ஆக்சிஜன் மற்றும் உணவு பற்றாக்குறை நேருமா - அறிக்கை

சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் திட்டமிட்டதை விட தாமதமாக 2025 பிப்ரவரி மாதம் பூமிக்கு திரும்புவார்கள் என்று நாசா அறிவித்துள்ளது. முதலில், போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் பூமிக்கு திரும்புவது என்று திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ டிராகன் விண்கலத்தில் திரும்புவது என மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்த தாமதம் குறித்து பலரும் கவலை தெரிவித்திருந்த நிலையில், நாசா தரப்பில், சர்வதேச விண்வெளி நிலையத்தில் அனைத்து வகையான வசதிகளும் இருப்பதால், விண்வெளி வீரர்களுக்கு எந்தவிதமான ஆபத்தும் இல்லை […]

சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் திட்டமிட்டதை விட தாமதமாக 2025 பிப்ரவரி மாதம் பூமிக்கு திரும்புவார்கள் என்று நாசா அறிவித்துள்ளது. முதலில், போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் பூமிக்கு திரும்புவது என்று திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ டிராகன் விண்கலத்தில் திரும்புவது என மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்த தாமதம் குறித்து பலரும் கவலை தெரிவித்திருந்த நிலையில், நாசா தரப்பில், சர்வதேச விண்வெளி நிலையத்தில் அனைத்து வகையான வசதிகளும் இருப்பதால், விண்வெளி வீரர்களுக்கு எந்தவிதமான ஆபத்தும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு 2 விண்கலங்கள் மூலம் அதிக அளவில் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டதாகவும், விண்வெளி வீரர்கள் தங்கும் இடம், உடற்பயிற்சி கூடம், காய்கறி தோட்டம் போன்ற வசதிகளை பயன்படுத்தி வருவதாகவும் நாசா தெரிவித்துள்ளது. எனவே, விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி நிலையத்தில் தொடர்ந்து வைத்திருப்பது பாதுகாப்பானது தான். ஆக்சிஜன் மற்றும் உணவு பற்றாக்குறை போன்றவை நேராது.” என்று நாசா வலியுறுத்தியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu