இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அமெரிக்க விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த மாதம் சர்வதேச விண்வெளி நிலையத்தை நோக்கி புறப்பட்டனர். ஆனால், ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவர்கள் விண்வெளியில் தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.இதற்கிடையே, சுனிதா வில்லியம்ஸ் நேற்று (செப்டம்பர் 19) தனது 59-வது பிறந்தநாளை விண்வெளியில் கொண்டாடினார். இது அவரது இரண்டாவது விண்வெளி பிறந்தநாளாகும். இதற்கு முன், 2012 ஆம் ஆண்டில் அவர் முதல் முறையாக விண்வெளியில் பிறந்தநாளை கொண்டாடினார்.
இந்த நிலையில், விண்வெளி வீரர்களின் உடல்நிலை பற்றிய கவலைகள் எழுந்துள்ளது. சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் இருவரும் உடல் மற்றும் மனரீதியாக நன்றாக இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது.