வெற்றிகரமாக பூமிக்கு திரும்புவோம் - சுனிதா வில்லியம்ஸ் நம்பிக்கை

ஸ்டார்லைனர் ஏவுகலன் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பப்பட்டுள்ள சுனிதா வில்லியம்ஸ் நேற்று நேரலையில் உலக மக்களுடன் உரையாடினார். ஸ்டார்லைனர் விண்கலத்தில் பல்வேறு தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டுள்ளதால் அவர் பூமிக்கு திரும்புவது தாமதமாகி உள்ளது. அவர் விண்வெளி நிலையத்தில் இருப்பது குறித்து பலரும் சர்ச்சை கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று அவர் உரையாடும் போது அவரது பாதுகாப்பை உறுதி செய்ததுடன், பூமிக்கு திரும்புவது குறித்து நம்பிக்கை தெரிவித்துள்ளார். சுனிதா வில்லியம்ஸ் உடன் புச் வெல்மோர் […]

ஸ்டார்லைனர் ஏவுகலன் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பப்பட்டுள்ள சுனிதா வில்லியம்ஸ் நேற்று நேரலையில் உலக மக்களுடன் உரையாடினார். ஸ்டார்லைனர் விண்கலத்தில் பல்வேறு தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டுள்ளதால் அவர் பூமிக்கு திரும்புவது தாமதமாகி உள்ளது. அவர் விண்வெளி நிலையத்தில் இருப்பது குறித்து பலரும் சர்ச்சை கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று அவர் உரையாடும் போது அவரது பாதுகாப்பை உறுதி செய்ததுடன், பூமிக்கு திரும்புவது குறித்து நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சுனிதா வில்லியம்ஸ் உடன் புச் வெல்மோர் என்ற அமெரிக்க விண்வெளி வீரரும் ஸ்டார்லைனரில் பயணம் செய்தார். இருவரும் நேற்று உரையாடிய போது, அவர்கள் விண்வெளி நிலையத்தில் வசிக்கும் காலம் நீட்டிக்கப்பட்டது குறித்து எந்த புகாரும் தெரிவிக்கவில்லை. மாறாக, அங்கு தங்கி இருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தனர். மேலும், ஸ்டார்லைனர் ஏவுகலனில் உள்ள அனைத்து கோளாறுகளும் சரி செய்யப்பட்டு அதன் மூலமாகத்தான் பூமிக்கு திரும்ப உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu