சுனிதா வில்லியம்ஸ்க்கு எலும்பு முறிவு ஏற்பட வாய்ப்பு - நாசா

விண்வெளியில் சுனிதா வில்லியம்ஸ்க்கு எலும்பு முறிவு ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது என்று நாசா தெரிவித்துள்ளது. இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் ஆகியோர் கடந்த மாதம் ஐந்தாம் தேதி சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஸ்டார் லைனர் விண்கலம் மூலம் சென்றனர். அங்கு அவர்கள் தற்போது ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், ஸ்டார் லைனர் விண்கலத்தில் ஹீலியம் வாயு கசிவு ஏற்பட்டதால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இவர்கள் பூமிக்கு திரும்புவதில் சிக்கல் […]

விண்வெளியில் சுனிதா வில்லியம்ஸ்க்கு எலும்பு முறிவு ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது என்று நாசா தெரிவித்துள்ளது.

இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் ஆகியோர் கடந்த மாதம் ஐந்தாம் தேதி சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஸ்டார் லைனர் விண்கலம் மூலம் சென்றனர். அங்கு அவர்கள் தற்போது ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், ஸ்டார் லைனர் விண்கலத்தில் ஹீலியம் வாயு கசிவு ஏற்பட்டதால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இவர்கள் பூமிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது. இதன் காரணமாக 50 நாட்களுக்கும் மேலாக சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் சிக்கியுள்ளார்.

இந்நிலையில் இவர்கள் இருவரும் தங்களுடைய தசை சக்தி மற்றும் எலும்பு அடர்த்தியை இழந்திருக்க கூடும் என்றும் இதனால் எலும்பு முறிவு ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது என்றும் நாசா தெரிவித்துள்ளது. அதோடு நீரிழப்பு மற்றும் எலும்புகளில் கால்சியம் சத்து குறைபாடு ஏற்படுவதால் சிறுநீரக கற்கள் உருவாகுவதற்கான வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu