ஸ்டார்லைனர் விண்வெளி பயணம் மீண்டும் ஒரு முறை ஒத்திவைப்பு

போயிங் நிறுவனம் தயாரித்த ஸ்டார்லைனர் விண்கலம் தனது முதல் விண்வெளி பயணத்தை கடந்த மே 7ஆம் தேதி தொடங்க இருந்தது. கடைசி நிமிடத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த திட்டம் ரத்து செய்யப்பட்டது. பிறகு, மே 10ம் தேதி அன்று திட்டம் செயல்படுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியானது. தற்போது, மீண்டும் ஒரு முறை திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வரும் மே 17ஆம் தேதி ஸ்டார்லைனர் விண்வெளி பயணம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி இருந்து ஆய்வு […]

போயிங் நிறுவனம் தயாரித்த ஸ்டார்லைனர் விண்கலம் தனது முதல் விண்வெளி பயணத்தை கடந்த மே 7ஆம் தேதி தொடங்க இருந்தது. கடைசி நிமிடத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த திட்டம் ரத்து செய்யப்பட்டது. பிறகு, மே 10ம் தேதி அன்று திட்டம் செயல்படுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியானது. தற்போது, மீண்டும் ஒரு முறை திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வரும் மே 17ஆம் தேதி ஸ்டார்லைனர் விண்வெளி பயணம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி இருந்து ஆய்வு மேற்கொள்வதற்காக விண்வெளி வீரர்கள் பயணப்பட்டு வருகின்றனர். முதல் முறையாக இந்த பயணத்திற்கு போயிங் நிறுவனம் தயாரித்த ஸ்டார்லைனர் கலம் பயன்படுத்தப்பட இருந்தது. இந்த திட்டத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் பயணப்பட இருந்தார். இது அவருக்கு 3 வது விண்வெளி பயணம் ஆகும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu