2023 ம் ஆண்டின் சூப்பர் ப்ளூ மூன் - நாளை நிகழ்கிறது

2023 ஆம் ஆண்டின் சூப்பர் ப்ளூ மூன் நிகழ்வு நாளை நடைபெற உள்ளது. ஒரு மாதத்தில் 2 முழு நிலவு நாட்கள் வந்தால் அது ப்ளூ மூன் என அழைக்கப்படுகிறது. அதைப் போல, வழக்கத்தை விட பூமிக்கு நிலவு மிக நெருக்கமாக வரும் பொழுது, அது அளவில் பெரியதாகவும் பிரகாசமானதாகவும் காட்சியளிக்கும். இந்த நிகழ்வு, சூப்பர் மூன் என அழைக்கப்படுகிறது. அந்த வகையில், நாளை நிகழவுள்ள அரிய வானியல் நிகழ்வு - சூப்பர் ப்ளூ மூன் ஆகும். […]

2023 ஆம் ஆண்டின் சூப்பர் ப்ளூ மூன் நிகழ்வு நாளை நடைபெற உள்ளது.

ஒரு மாதத்தில் 2 முழு நிலவு நாட்கள் வந்தால் அது ப்ளூ மூன் என அழைக்கப்படுகிறது. அதைப் போல, வழக்கத்தை விட பூமிக்கு நிலவு மிக நெருக்கமாக வரும் பொழுது, அது அளவில் பெரியதாகவும் பிரகாசமானதாகவும் காட்சியளிக்கும். இந்த நிகழ்வு, சூப்பர் மூன் என அழைக்கப்படுகிறது. அந்த வகையில், நாளை நிகழவுள்ள அரிய வானியல் நிகழ்வு - சூப்பர் ப்ளூ மூன் ஆகும். அதாவது, ப்ளூ மூன் மற்றும் சூப்பர் மூன் ஆகிய இரு நிகழ்வுகளும் ஒருசேர நடைபெற உள்ளன. இத்தகைய நிகழ்வு, பொதுவாக 10 - 20 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நிகழும் என நாசா தெரிவித்துள்ளது.

பொதுவாக, ஒரு ஆண்டில் நிகழும் 25% முழு நிலவு நாட்கள் சூப்பர் மூன் ஆக இருக்கும். ஆனால், 3% முழு நிலவு நாட்கள் மட்டுமே ப்ளூ மூன் ஆக இருக்கும். தற்போது, இரு நிகழ்வுகளும் ஒருசேர அமைவது மிகவும் அரிதானதாக சொல்லப்பட்டுள்ளது. இத்தகைய அடுத்த நிகழ்வு, 2037 ஆம் ஆண்டு நிகழும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை, சூரியன் மறைவுக்கு பிறகு தொடங்கி வியாழக்கிழமை வரையில் இந்த நிகழ்வு காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu