தமிழகத்திற்கு திறந்து விடும் தண்ணீரை கர்நாடக அரசு திறந்து விட மறுப்பதாக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கின் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. இதில் தமிழக அரசு சார்பில் ஆகஸ்ட் மாதம் முதல் தண்ணீர் திறப்பில் கர்நாடக பிரச்சனை செய்து வருகிறது. காவிரி நீர் மேலாண்மை வாரியத்தின் உத்தரவை கர்நாடகம் செயல்படுத்துவது இல்லை. தற்போதைய கர்நாடக அணையின் நீரின் அளவைப் பொறுத்து பார்த்தால் தமிழகத்திற்கு 6400 கன அடி நீரை திறந்து விட வாய்ப்புள்ளது. இருப்பினும் 5000 கன அடி நீரை திறந்து விட்டால் போதும். ஆனால் கர்நாடகா அரசு உத்தரவை செயல்படுத்த மறுத்து வருகிறது என்று வாதம் முன்வைத்தனர்.
இதன் பின்னர் கர்நாடகா அரசு தமிழகத்திற்கு 2500 கன அடி தண்ணீர் மட்டுமே திறக்க முடியும் என்ற வாதம் வைத்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவில் தலையிட முடியாது என தெரிவித்தனர். அதேபோல் தமிழ்நாட்டிற்கு உரிய நீரை திறந்து விட வேண்டும் என கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.