ஸ்விக்கி ஐபிஓ - முதலீட்டாளர்கள் மத்தியில் அதிகரிக்கும் ஆர்வம்

September 26, 2024

இந்தியாவின் மிகப்பெரிய உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி, அதன் ஐபிஓவுக்கான ஒப்புதலை சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபியிடம் இருந்து பெற்றுள்ளது. இந்த செய்தி வெளியானதும், ஸ்விக்கியின் பங்குகளின் மதிப்பு வானளாவ உயர்ந்துள்ளது. ஜூலை மாதத்தில் ₹355-க்கு வர்த்தகமாகி வந்த ஸ்விக்கி பங்குகள், இப்போது ₹490-ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம், நிறுவனத்தின் மதிப்பு இரண்டு மாதங்களில் ₹70,000 கோடியிலிருந்து ₹1.16 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. ஸ்விக்கியின் வருவாய் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 36% அதிகரித்து ₹11,247 கோடியாகவும், நிகர […]

இந்தியாவின் மிகப்பெரிய உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி, அதன் ஐபிஓவுக்கான ஒப்புதலை சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபியிடம் இருந்து பெற்றுள்ளது. இந்த செய்தி வெளியானதும், ஸ்விக்கியின் பங்குகளின் மதிப்பு வானளாவ உயர்ந்துள்ளது. ஜூலை மாதத்தில் ₹355-க்கு வர்த்தகமாகி வந்த ஸ்விக்கி பங்குகள், இப்போது ₹490-ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம், நிறுவனத்தின் மதிப்பு இரண்டு மாதங்களில் ₹70,000 கோடியிலிருந்து ₹1.16 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

ஸ்விக்கியின் வருவாய் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 36% அதிகரித்து ₹11,247 கோடியாகவும், நிகர இழப்பு 44% குறைந்துள்ளது. இந்த வளர்ச்சிதான் முதலீட்டாளர்களை ஸ்விக்கி மீது அதிகமாக கவர்ந்துள்ளது. தற்போது, ஸ்விக்கி தனது ஐபிஓ மூலம் ₹11,000 கோடி நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது. இந்த நிதியை பயன்படுத்தி, தனது வணிகத்தை மேலும் விரிவுபடுத்தவும், புதிய தொழில்நுட்பங்களை கையகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu