டி.என். பி.எல் 2024 தொடரில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
டி.என். பி.எல் கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி லயகா கோவை கிங்ஸ் அணியை இதன் மூலம் 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி டி.என். பி.எல் 2024 கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. முதலில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய கோவை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்களை குவித்தது. அதனை தொடர்ந்து களமிறங்கிய திண்டுக்கல் அணி 18.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்களை எடுத்தது. இதன் மூலம் 6 விக்கெட் வித்தியாசத்தில் திண்டுக்கல் அமி சாம்பியன் பட்டம் வென்றது.