டி20 உலக கோப்பை தொடரில் 5வது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி 125 ரன்களில் அபார வெற்றி பெற்றது.
டி20 உலக கோப்பை தொடரின் 5 ஆவது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - உகாண்டா அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற உகாண்டா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் 20 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் குவித்தது. இதனை அடுத்து களம் இறங்கிய உகாண்டா அணி 16 ஓவர்களில் 58 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனால் ஆப்கானிஸ்தான் அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது