டிக் டாக் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக் கூடியது என தைவான் நாடு அறிவித்துள்ளது. தைவான் நாட்டில், அரசாங்க வளாகத்துக்குள் டிக் டாக் பயன்பாடு ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தைவான் நாட்டு டிஜிட்டல் விவகாரத்துறை அமைச்சர் ஆண்ட்ரே டாங், டிக் டாக் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிப்பதாக அறிவித்துள்ளார். வெளிநாட்டினரின் கட்டுப்பாட்டுக்குள் இந்த செயலி இயங்குவதாகவும் இதனால் தேசிய தகவல் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்படும் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், டிக்டாக் ஐ பொறுத்தவரை அமெரிக்கா பின்பற்றும் அதே நடைமுறைகளை தைவான் பின்பற்றி வருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில், பொது இடங்களிலும் டிக் டாக் பயன்பாட்டை விரைவில் தடை செய்ய தைவான் நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.