தைவானை சுற்றி 36 சீன ராணுவ விமானங்கள் மற்றும் 6 போர்க்கப்பல்கள்

March 22, 2024

இன்று சீனாவின் போர்க்கப்பல்கள் மற்றும் போர் விமானங்கள் தைவானைச் சுற்றி காணப்பட்டதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. தைவான் நாட்டு பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், இன்று காலை, சீனாவின் 36 போர் விமானங்கள் மற்றும் 6 போர்க்கப்பல்கள் தைவான் பகுதியில் காணப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 13 போர் விமானங்கள் தைவானின் வடக்கு பகுதியில் நுழைந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக, நேற்று, 32 சீன போர் விமானங்கள் தைவான் நாட்டில் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அடுத்தடுத்து 2 நாட்களில் […]

இன்று சீனாவின் போர்க்கப்பல்கள் மற்றும் போர் விமானங்கள் தைவானைச் சுற்றி காணப்பட்டதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தைவான் நாட்டு பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், இன்று காலை, சீனாவின் 36 போர் விமானங்கள் மற்றும் 6 போர்க்கப்பல்கள் தைவான் பகுதியில் காணப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 13 போர் விமானங்கள் தைவானின் வடக்கு பகுதியில் நுழைந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக, நேற்று, 32 சீன போர் விமானங்கள் தைவான் நாட்டில் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அடுத்தடுத்து 2 நாட்களில் சீன விமானங்கள் தைவானை சுற்றி வருவது அந்தப் பகுதியில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. சீனாவின் விமானங்கள் மற்றும் கப்பல்களை தொடர்ந்து கண்காணித்து வருவதாக தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu