சீன வரைபடம் - இந்தியாவுக்கு பிலிப்பைன்ஸ், மலேசியா, வியட்நாம், தைவான் ஆதரவு

September 1, 2023

அருணாசலப் பிரதேச விவகாரத்தில் இந்தியாவுக்கு ஆதரவளிக்கப் போவதாக பிலிப்பைன்ஸ், மலேசியா, வியட்நாம், தைவான் ஆகிய நாடுகள் தெரிவித்துள்ளன. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நீண்ட காலமாக எல்லை பிரச்சினை இருந்து வருகிறது. வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில் அகாசி சின் என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியை தனது நாட்டின் ஒரு பகுதியாக சீனா கூறிக்கொண்டு இருக்கிறது. மேலும் அருணாச்சல பிரதேசத்தை தெற்கு திபெத் எனவும் கூறி வருகிறது. இது தொடர்பாக புதிய வரைபடத்தை சீனா கடந்த இரண்டு […]

அருணாசலப் பிரதேச விவகாரத்தில் இந்தியாவுக்கு ஆதரவளிக்கப் போவதாக பிலிப்பைன்ஸ், மலேசியா, வியட்நாம், தைவான் ஆகிய நாடுகள் தெரிவித்துள்ளன.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நீண்ட காலமாக எல்லை பிரச்சினை இருந்து வருகிறது.
வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில் அகாசி சின் என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியை தனது நாட்டின் ஒரு பகுதியாக சீனா கூறிக்கொண்டு இருக்கிறது. மேலும் அருணாச்சல பிரதேசத்தை தெற்கு திபெத் எனவும் கூறி வருகிறது. இது தொடர்பாக புதிய வரைபடத்தை சீனா கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியிட்டது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

இந்த வரைபட விவகாரம் ஒரு வழக்கமான நடவடிக்கை தான் என்று சீனா கூறி இருந்த போதிலும் அருணாச்சல பிரதேசம் மாநிலம் முழுதும் இந்தியாவுக்கு சொந்தமானது என்று இந்தியா கூறியுள்ளது. இதோடு சீனா தனது வரைபடத்தில் தைவானையும் தன் நாட்டின் ஒரு பகுதி என்று தெரிவித்துள்ளது. அதோடு தென் சீன கடல் பகுதியில் 80 சதவீதம் சீனாவுக்கு சொந்தமானது என்று கூறி வருகிறது. சீனாவின் இந்த நடவடிக்கைக்கு வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா மற்றும் தைவான் ஆகிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. சீனாவின் இந்த வரைபடத்தை ஏற்க முடியாது என்றும் இந்த நாடுகள் தெரிவித்துள்ளன. மேலும், அருணாசலப் பிரதேச விவகாரத்தில் இந்தியாவுக்குதான் ஆதரவளிக்கப் போவதாகவும் இந்த நாடுகள் தெரிவித்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu