முந்தைய அரசுடன் தொடர்புடைய அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் வெளிநாட்டு தூதரகங்களுடன் உறவை துண்டிப்பதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர்.
மேற்கத்திய நாடுகளின் தூதரகங்களுடன் தொடர்பை துண்டிப்பதாக தலிபான் அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்படுவதாவது, முந்தைய அரசால் நியமிக்கப்பட்டு தற்போது உள்ள தலிபான் ஆட்சியை அங்கீகரிக்காமல் செயல்பட்டு வரும் வெளிநாட்டு ஆப்கன் தூதரகங்களுடன் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஸ்விட்சர்லாந்து, ஜெர்மனி, ஆஸ்திரியா, இங்கிலாந்து, பெல்ஜியம், பிரான்ஸ், போலந்து, இத்தாலி, கிரீஸ், ஸ்வீடன், ஆஸ்திரேலியா, நார்வே, கனடா ஆகிய 14 நாடுகளில் உள்ள தூதரகங்கள் விநியோகிக்கும் நுழைவு விசா இனி ஏற்றுக் கொள்ளப்படாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.